நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது: அசாம் பாக்கி

குவா முசாங்: 

2002-ஆம் ஆண்டு மலேசியா ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை வாங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி விசாரணை தொடர்கின்றது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவரது தரப்பு வெளிநாடுகளில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

சில பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு இன்னும் வெளிநாட்டுத் தரப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கு இன்னும் தங்கள் விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இந்த நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட்ட விவகாரம் 2010-ஆம் ஆண்டு சர்ச்சையை கிளப்பியது.

இதில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்குக்கும் தொடர்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.

2002-ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப் பிரெஞ்சு கடற்படை கப்பல் கட்டும் பிரிவான DCN-லிருந்து கிட்டத்தட்ட US$1.17 பில்லியன் மதிப்பிலான இரண்டு ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களையும் ஒரு அகோஸ்டா வகை நீர்மூழ்கிக் கப்பலும் வாங்கப்பட்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset