
செய்திகள் உலகம்
ஈரானில் இளம் ஜோடி தெருவில் கட்டிப்பிடித்து நடனம்; வைரலான வீடியோ: 10 வருடம் சிறை
டெஹ்ரான்:
ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக தெருவில் கட்டிப்பிடித்து ஆபாசமாக நடனம் ஆடிய இளம் ஜோடிக்கு 10 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு அரசு, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
பொது வெளியில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது அவசியம். பொது இடங்களில் நடனம் ஆடுவது மற்றும் பாட்டு பாடுவது ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. அதுவும், கணவனல்லாத வேறொரு ஆணுடன் ஒன்றாக ஆடல், பாடல்களில் ஈடுபடுவதற்கும் தடையுள்ளது.
இந்த நிலையில், 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமிர் முகமது அகமதி ஆகிய இளம் ஜோடி ஒன்று பிரசித்தி பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆசாதி கோபுரம் முன்பு கட்டிப்பிடித்தபடி, காதல் நடனம் ஆடி உள்ளது. இதுபற்றிய வீடியோ வைரலானது. அவர்கள் சமூக வலைதளங்களிலும் அப்போது பிரபலம் அடைந்து இருந்தனர்.
இஸ்லாமிய சட்ட விதிகளை மீறியதற்காக, கடந்த நவம்பரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் கடந்த ஆண்டில் தீவிரமடைந்து இருந்தது.
இந்த சூழலில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ அமைந்து உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில், அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் வலைதளம் பயன்படுத்துவதற்கும், ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am