செய்திகள் மலேசியா
ஆள்கடத்தல் கும்பலுக்கு உதவும் லங்காவி மீனவர்கள்?: உள்துறை அமைச்சர் கவலை
லங்காவி:
லங்காவியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதாக நம்பப்படுகிறது என உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜெய்னுதீன் Hamzah Zainudin தெரிவித்துள்ளார்.
அண்டை நாட்டில் இருந்து பலர் மலேசியாவுக்கு கடத்தி வரப்படுவதாகவும், அதுகுறித்து துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கடலில் கடத்தல்காரர்களுக்கு ஒத்துழைத்து சட்ட விரோத குடியேறிகளை தங்கள் படகுகளின் மூலம் மலேசியாவுக்குள் கடத்தி வருகின்றனர். இத்தகைய மீனவர்கள் துரோகிகள் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் Hamzah Zainudin தெரிவித்தார்.
நாட்டுக்குள் சட்ட விரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை, தேசிய நடவடிக்கை படை மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"முன்பு பெரிய படகுகளின் மூலம் அவர்கள் சட்டவிரோதாக நுழைந்தனர். இ்போது தங்கள் வியூகத்தை மாற்றி உள்ளனர். நடுக்கடலில் சிறு தீவுகளில் காத்திருந்து அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கிறார்கள். எப்போது ரோந்துப் பணி குறைவாக உள்ளது அல்லது முழுமையாக இல்லை என்பதை தெரிந்துகொண்டு, சரியான தருணத்துக்காக காத்திருக்கிறார்கள்.
"பின்னர் சில படகுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மலேசிய கடற்பகுதிக்குள் ஆள்கடத்தல் கும்பல் சட்டவிரோதக் குடியேறிகளை அழைத்து வருகின்றனர். பின்னர் நடுக்கடலில் அந்த சட்டவிரோத குடியேறிகளை அழைத்துச் செல்ல சில படகுகள் காத்திருக்கும். தற்போது இப்படித்தான் செயல்படுகிறார்கள்.
"மீனவர்களின் இத்தகைய செயல்பாடு நாட்டை அழித்துவிடும். இதுகுறித்து பல்வேறு மீனவர் சங்கத் தலைவர்களுடனும் மீனவர்களுடனும் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஆள்கடத்தல் கும்பல் சட்ட விரோத குடியேறிகளை மட்டும் மலேசியாவுக்குள் அழைத்து வருவதில்லை. அக்குழுக்கள் போதை மருந்து கடத்தலிலும் ஈடுபடுகின்றன," என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜெய்னுதீன் Hamzah Zainudin மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
