
செய்திகள் மலேசியா
கோதுமை மாவின் விலை கடுமையாக அதிகரிக்குமா?: அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர்:
ஜூலை 1ஆம் தேதி முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுவதை உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்ட்ரா நன்தா லிங்கி (Alexander Nanta Linggi) மறுத்துள்ளார்.
அப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உற்பத்தியாளர்களுக்கு அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 1.35 ரிங்கிட் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருவதாகவும், மானிய விலையில் விற்கப்படும் கோதுமை மாவின் விலை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜூலை 1ஆம் தேதி முதல் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக ஒரு தகவல் பரவியது.
இந் நிலையில் மானியம் பெறப்படாத கோதுமை மாவுக்கான ஒரு கிலோ மற்றும் 25 கிலோ எடைகொண்ட பாக்கெட்டுகளின் விலையை உயர்த்த அனுமதி கோரி உற்பத்தியாளர்களிடம் இருந்து தமது அமைச்சுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக Alexander Nanta Linggi தெரிவித்துள்ளார்.
எனினும், விலை உயர்வுக்கு முன்னர் விநியோக கட்டுப்பாட்டாளரின் அனுமதியை உற்பத்தியாளர்கள் பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
"எனவே தற்போதைய நிலையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த உற்பத்தியாளருக்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை," என அமைச்சர் Alexander Nanta Linggi தெளிவுபடுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm