
செய்திகள் மலேசியா
கட்டுப்பாட்டு விதிமீறல்: ஏழு பிரபலங்களுக்கு அபராதம்
கோலாலம்பூர்:
நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது பின்பற்ற வேண்டிய SOPக்களை, முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் ஏழு பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முஹம்மது ஜெய்னல் அப்துல்லாஹ் Mohamad Zainal Abdullah நேற்று தெரிவித்தார்.
அக் குறிப்பிட்ட ஏழு பிரபலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் SOPக்களை மீறி இருந்தனர். புக்கிட் பிந்தாங் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றபோது அவர்கள் இத்தவறைப் புரிந்தனர் என்று அவர் விளக்கம் அளித்தார்.
"ஆறு பேரும் முகக்கவசம் அணியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அது முழுமையாக நடந்து முடியும் வரை SOPக்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவில்லை. எனவே ஆறு பிரபலங்களுக்கும் 1,500 ரிங்கிட் அபராதமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 10 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. அனைவருக்கும் திங்கட்கிழமை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மொத்த அபராதத் தொகை 19,000 வெள்ளி என்றார் ஏசிபி Mohamad Zainal Abdullah.
மேற்குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு தங்குவிடுதியில் நடைபெற்றது. அது தொடர்பான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
அவற்றில் உள்ளூர் பிரபலங்கள் சிலர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அந்நிகழ்வில் பங்கேற்றது தெரிய வந்தது.
இதையடுத்து மே 2ஆம் தேதி இதுகுறித்து போலிசார் விசாரணையைத் தொடங்கினர். அதன் முடிவில் இப்போது ஏழு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm