நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியா: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் "இந்திய ஆட்சியின் கீழ் உள்ள பஞ்சாப் தனிநாடாக வேண்டுமா? வேண்டாமா? என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்தினர்.

அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் இந்தியர்கள் அங்கு சென்றனர். அவர்களைக் கண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.இரு சம்பவங்கள் தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset