
செய்திகள் மலேசியா
குழந்தைப் பராமரிப்பு பணியில் புதிய இளம் பட்டதாரிகள்: மலேசிய மனிதவள சங்கம் தகவல்
கோலாலம்பூர்:
வெளிநாட்டுப் பணிப்பெண்கள் பற்றாக்குறை காரணமாக மலேசியாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாமல் நெருக்கடியில் உள்ளன.
இதையடுத்து குழந்தைப் பராமரிப்புக்காக சிலர் இளம் பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதாக மலேசிய மனிதவள சங்கம் (National Association of Human Resources) தெரிவித்துள்ளது.
முழு முடக்க வேளையில் இக்குடும்பங்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போராடுவதாக அச் சங்கத்தின் தலைவர் ஸெரினா இஸ்மாயில் (zarina Ismail) கூறுகிறார்.
"புதிதாக தேர்ச்சி பெற்று வரும் பட்டதாரிகள் வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற பொறுப்புகளை ஏற்பதில்லை. பகுதி நேரமாக குழந்தைப் பராமரிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுபவர்.
"வேலை பார்க்கும் தாய்மார்கள் தற்போது வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டியுள்ளது. இருப்பினும் குடும்பத்தையும் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
"பணிப்பெண்களைத் தருவிக்கும் ஏஜென்சிகள் அதற்குரிய விண்ணப்பங்களை வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மை அமைப்பின் மூலம் அளிக்க முடியாமல் காத்திருக்கின்றன.
"அனைத்து விதமான நடைமுறைகளையும் கடந்து இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மூன்று மாதங்கள் ஆகும். ஒருவேளை விண்ணப்ப நடைமுறையில் தாமதம் ஏற்பட்டால் பத்தாயிரம் குடும்பங்களும் முதலாளிமார்களும் அடுத்த ஆண்டு மார்ச் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
"இது குறித்து உள்துறை, மனிதவள அமைச்சுகளும் குடிநுழைவுத்துறையும் கலந்தாலோசிக்க வேண்டும்," என்று ஸெரினா இஸ்மாயில் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm