
செய்திகள் உலகம்
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு - 100 பேர் காயம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பள்ளிவாசல் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதே சமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:31 pm
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
March 22, 2023, 1:22 pm
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
March 22, 2023, 10:31 am
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
March 22, 2023, 9:11 am
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
March 22, 2023, 12:45 am
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
March 21, 2023, 9:51 pm
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
March 20, 2023, 7:37 pm
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
March 20, 2023, 6:58 pm
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு
March 20, 2023, 3:47 pm