நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் உள் வளாகங்களில் முகக்கவசம் அணிவது கைவிடப்படுகிறது 

சியோல்:

தென்கொரியாவில் முகக்கவசம் அணிவதைக்  கைவிடத் அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது. 

தற்போது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொதுவிடங்களில் உட்புறங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கிறது. 

இன்று அங்கு COVID-19 எண்ணிக்கை 20,000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. 

தினசரி பல 100 ஆயிரம் பேருக்குக் COVID-19 பாதிப்பு ஏற்பட்ட நிலைமையில் இருந்து தென் கொரியாவில் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ளது.

தென் கொரிய மக்கள் நாளை முதல் (30 ஜனவரி) பொது இடங்களுக்கு முகக்கவசம் இன்றிச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கூடம், விளையாட்டு நிலையம் போன்ற இடங்களுக்குச் செல்ல முகக்கவரி இனி தேவைப்படாது. 

எனினும் மருத்துவமனை, பொதுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு முகக்கவசம் கட்டாயம். 

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதைத் தென் கொரியா கைவிட்டது. 

தற்போது நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருவவதால் முகக்கவசத்தை கைவிடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset