
செய்திகள் மலேசியா
பொதுத்தேர்தல் குறித்து பிரதமர் கோடிகாட்டினார்: டத்தோ உஸ்மான் சபியான்
கோலாலம்பூர்:
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜோகூர் மாநில முன்னாள் முதல்வர் டத்தோ உஸ்மான் சபியான் Osman Sapian தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் கோடிகாட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி இணையம் வழி நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற போது பிரதமர் பேசியது தம்மை இவ்வாறு கருத வைத்ததாக டத்தோ உஸ்மான் கூறினார்.
"நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டரசு அளவில் நிறைவேறிய பின்னர் மாநிலங்களில் கவனம் செலுத்துவோம். இல்லையெனில் மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை நிறைவேற்ற காத்திருக்க வேண்டும்.
"எனவே, இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படக் கூடும். அநேகமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கக்கூடும்.
"எதுவும் முடியாத ஒன்றல்ல. இதற்கு முன்பும்கூட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளது. அதே சமயம் ஆண்டு இறுதியில் பருவ மழைக்காலம் என்பதால் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் தேர்தல் நடைபெற வாய்ப்புண்டு.
"அரசாங்கம் வகுத்துள்ள இலக்குகளுக்கு ஏற்ப தொற்று எண்ணிக்கை குறையும் பட்சத்தில், நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம்," என்றார் டத்தோ உஸ்மான் சபியான்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm