
செய்திகள் மலேசியா
மூல காரணம் தெரியாத தொற்றுகள் அதிகரிப்பு: நூர் ஹிஷாம் கவலை
கோலாலம்பூர்:
கிருமித்தொற்றுக்கான மூல காரணம் தெரியாத அல்லது எந்த நடப்பு தொற்றுத் திரள்களுடனும் தொடர்பில்லாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578,105 என்றும், அவர்களில் சுமார் 400,000 பேர் மேற்குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூல காரணங்கள் தெரியாத தொற்றுச் சம்பவங்கள் சிலாங்கூரில் தான் அதிகம் பதிவாகி உள்ளது. அம்மாநிலத்தில் 151,725 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 44,517, சரவாக்கில் 40,889 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
"மூல காரணம் தெரியாத சமூகத் தொற்றுகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களிடம் தொற்று அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதுதான் மிகுந்த கவலை அளிக்கிறது.
"இதனால் மற்றவர்களுக்கும் மிக எளிதில் தொற்று பரவுகிறது. SOPக்களை பின்பற்றாததால் இவ்வாறு தொற்று ஏற்படுகிறது," என்று அறிக்கை ஒன்றில் டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm