நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

14 நாட்கள் கெடு விதித்துள்ளதா அம்னோ?: மறுக்கிறார் இஸ்மாயில் சப்ரி யாகூப்

கோலாலம்பூர்:

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் அம்னோ இறுதிக்கெடு விதித்திருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறியுள்ளார்.
14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற பரிந்துரை அம்னோ அரசியல் பணியகத்தால் முன்வைக்கப்பட்ட ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இவ் விஷயத்தில் அம்னோ உச்ச மன்றம்தான் முடிவெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அரசியல் பணியகத்தால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் என்றார்.

"நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்பதுதான் அம்னோவின் ஒருமித்த கருத்து. எனினும், இதுகுறித்து உச்ச மன்றம் இதுவரை வேறெந்த முடிவும் எடுக்கவில்லை," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இஸ்மாயில் சப்ரி யாகூப்.

முன்னதாக, நாடாளுமன்றத்தை 14 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என நடப்பு பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்துக்கு நேற்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிதி இறுதிக்கெடு வைத்ததாக தகவல் வெளியானது.

அவ்வாறு நடக்கவில்லை எனில் அடுத்து எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset