நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கார்த்திக் ஷியாமளன் இயக்கத்தில் அடைமழைக் காலம்

கோலாம்பூர்: 

மலேசியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் ஷியாமளன் இயக்கத்தில் இன்று அடைமழைக் காலம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.   

லோக வர்மன், தியா லக்ஷ்னா, யுவராணி, சசிதரன் கே. ராஜு ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் விறுவிறுப்பு குறையாமல் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்  திரைப்படங்களுக்கு இணையாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. கார்த்திக்  ஷியாமளனின் அனுபவ இயக்கம் அனைத்து பிரேம்களிலும் தெரிகிறது. 

நடிகர் நடிகையர்களுக்கு சம அளவில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருப்பது தெரிகிறது. காட்சி அமைப்புகளும், படம் பிடித்த சூழலும் அருமையாக உள்ளன.

இது மலேசியத் திரைப்படமா என்று புருவம் உயர்த்தும் அளவுக்கு தரமாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் ஷியாமளன்.

தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிவரும் கார்த்திக் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 

அடைமழைக் காலம் தென்றலாக புறப்பட்டு வசந்தமாக வளர்ந்து இதமாக முடிந்துள்ளது.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset