நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஆஸ்கர் இறுதி பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் - தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம்

நியூயார்க்:

ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம். 95ஆவது ஆஸ்கர் விழா மார்ச் 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றற "நாட்டு நாட்டு' பாடலானது சிறந்த பாடலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 4 பாடல்களுடன் இந்தப் பாடல் போட்டியிடுகிறது.

நாட்டு நாட்டு' பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset