
செய்திகள் மலேசியா
MCO 3.0: பலன் கிடைக்கிறது; அன்றாட தொற்றுப் பாதிப்பு ஐந்தாயிரத்துக்கும் கீழ் பதிவானது
கோலாலம்பூர்:
மலேசியாவில் அன்றாட தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக நாட்டில் அன்றாட தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி வந்தது. இதையடுத்து முழுமுடக்க நிலை அமலில் உள்ளது.
முதற்கட்டமாக தினசரி தொற்றுச் சம்பவங்கள் நான்காயிரத்துக்கும் கீழ் பதிவாக வேண்டும் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக தொற்று எண்ணிக்கை ஆறாயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அண்மைய தினங்களில் முதல் முறையாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஐந்து ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, சிலாங்கூரில் 1,346 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
சரவாக்கில் 682, பேராக்கில் 453, நெகிரி செம்பிலானில் 437, ஜோகூரில் 314, கோலாலம்பூரில் 310, கிளந்தானில் 219, மலாக்காவில் 205, கெடாவில் 182, சபாவில் 166, லாபுவான் 130 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மாநிலங்களில் நூற்றுக்கும் குறைவான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில், பினாங்கில் 84 பேரும், பகாங்கில் 50 பேரும், திரங்கானுவில் 18 பேரும், ஆகக் குறைவாக புத்ராஜெயாவில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm