செய்திகள் மலேசியா
சிப்பாங் விமான நிலையத்தில் மணிக் கணக்கில் நீண்ட வரிசை: தொடர்கதையாகி உள்ளது
சிப்பாங்:
சிப்பாங் அனைத்துலக விமான நிலைத்தில் நீண்ட தூரம் வரிசையில் காத்திருப்பது தொடர் கதையாகிறது.
கேஎல்ஐஏ விமான நிலைத்திற்கு வரும் பயணிகள் குடிநுழைவு சோதனைக்காக பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால் அங்கு வரும் பயணிகளிடம் இருந்து பல புகார்கள் கிடைத்துள்ளன.
இப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.
ஆனாலும் அப் பிரச்சினைக்கு தீர்வு பிறக்கவில்லை.
இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய தாம் கிட்டத்தட்ட 1 மணி நேரம் குடிநுழைவு சோதனைக்காக காத்திருந்தாக ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றால் அதிக முகப்பிட அலுவலர்கள் கடப்பிதழ்கலை பார்வையிட்டு துரிதமாக பயணிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றொரு பயணி மலேசியாவைவிட மும்மடங்கு பயணிகளை பேங்காக் விமான நிலையம் கையாளுகிறது. ஆனால், கேஎல் விமான நிலையங்கள் போல் மெதுவாக அவர்கள் செயல்படவில்லை. பயணிகள் துரிதமாக வெளியேற்றப்படுகிறார்கள். இந்த மந்த நிலை சுற்றுப்பயணிகளை எரிச்சல் அடையச் செய்கிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 11:46 am
ஷாரா இறப்பதற்கு முன்பு கழிப்பறையில் ஹனாஃபி சட்டை அணிந்த நபரை மாணவி பார்த்துள்ளார்
October 28, 2025, 9:23 am
பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
October 28, 2025, 9:05 am
பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சைபுடின் நீக்கம்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:35 pm
