நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5G தொழில்நுட்ப பயன்பாடு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர்:

செரிவூட்டப்பட்ட 5G தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாட்டின் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த 5G தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யவும் அதன் தேர்வு நிலையை மதிப்பீடு செய்யவும் DIGITAL NATIONAL BERHAD எனப்படும் தேசிய இலக்கியவியல் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விவரித்தார். 

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 80 விழுக்காடு பகுதிகளில் இந்த 5G தொழில்நுட்பமானது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தமது நம்பிக்கையை முன்வைத்தார்.

5G தொழில்நுட்பத்தால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset