
செய்திகள் மலேசியா
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழியுங்கள்: ஜொகூர் சுல்தான்
ஜொகூர் பாரு:
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைக்க வைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழிக்க வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் ஆணையிட்டுள்ளார்.
பங்சா ஜொகூர் ஒற்றுமையானது மாநில மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. அந்த ஒற்றுமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று அவர் கூறினார்.
ஒருமைப்பாடும் புரிந்துணர்வும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுங்கெலும்பாக திகழ்வதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியால் மேற்கொள்ளப்பட்ட பொது தேர்வு பயிலரங்கில் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு கருத்துரைத்தார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am