
செய்திகள் மலேசியா
ஒரு லட்சம் கர்ப்பிணிகள் தடுப்பூசிக்கு பதிந்துள்ளனர்: கைரி ஜமாலுத்தீன்
கோலாலம்பூர்
நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிந்துள்ளனர் என்று தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுத்தீன் தெரிவித்துள்ளார்.
இணையம் வழி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், கோலாலம்பூரைச் சேர்ந்த மூவாயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து உரிய விவரம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதேபோல் பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 224 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"கர்ப்பிணிப் பெண்களுக்காக கோலாலம்பூரிலும் பெர்லிஸிலும் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அடுத்து வரும் வாரங்களில் மேலும் பலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நேர ஒதுக்கீடு முடிவு செய்யப்படும்.
"தடுப்பூசிகள் வந்து சேரும் காலகட்டத்துக்கு ஏற்ப கர்ப்பிணிப் பெண்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்படும்.
"இதுவரை 96,196 கர்ப்பிணிப் பெண்கள் பதிந்துள்ளனர்," என்றார் அமைச்சர் கைரி ஜமாலுத்தீன்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm