
செய்திகள் கலைகள்
வாரிசு வெற்றி கொண்டாட்டம்: விமான நிலையத்தில் பாதுகாவலர் இல்லாமல் வரிசையில் நின்ற விஜய்
ஹைதராபாத்:
விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சரத்குமார், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
வாரிசு படம் ரிலீஸாகி ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'வாரிசு' படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக், நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் வாரிசு பட வெற்றி கொண்டாட்டம் முடிந்து ஹைதராபாத் விமான நிலையம் திரும்பபினார். ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர் இல்லாமல் நடந்து சென்றார்.
விஜய் மற்ற பயணிகளைப் போலவே பாதுகாப்பு சோதனை வரிசையில் நுழைந்தார், முககவசம் அணிந்து இருந்தார்.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
அமெரிக்க நடிகை டயேன் கீட்டன் காலமானார்
October 10, 2025, 3:10 pm
சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும்: வெங்கட்பிரபு
October 6, 2025, 8:09 pm
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
October 4, 2025, 8:40 pm
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
October 4, 2025, 7:56 pm