நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் சீனா புத்தாண்டின் கொண்டாட்டத்தில்  துப்பாக்கிச்சூடு பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. 

அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது. 

அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடிக்க முயன்றபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்ட்ரே பார்க் நகரம் முழுவதும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset