
செய்திகள் மலேசியா
அரசியல் அமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்: டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தை உடனே கூட்டவேண்டும் என்றும் இல்லையெனில் அரசியல் அமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தாமல் இருப்பது மாமன்னரின் ஆணைக்கு எதிராகச் செயல்படுவதாக ஆகிவிடும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"எனவே, மாமன்னரின் கருத்தை அரசாங்கம் மிகத் தீவிரமானதாக கருதவேண்டும். மாமன்னர் தனது ஆணையைப் பிறப்பித்து விட்டார்.
எனினும், அதைச் செயல்படுத்துவதில் இன்னமும் கூட தாமதம் நிலவுகிறது. இத்தகைய செயல்பாடுகளை அரசியல் அமைப்பு நெருக்கடியாக கருதமுடியும். இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதே நமது விருப்பம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
"மாமன்னர் உத்தரவிட்ட உடனேயே ஜொகூர் மந்திரிபெசார் ஜொகூர் ஆட்சியாளரின் உத்தரவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிப்பதை கூட்டரசு பிரதேச அரசாங்கம் நல்ல உதாரணமாக கொள்ள வேண்டும். மாமன்னரின் ஆணையைப் பின்பற்றி ஒரு வாரத்துக்குள் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை மாவட்ட அளவில் நடத்தி உள்ளனர். இதில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
"எனவே, மாமன்னரின் ஆணையைச் செயல்படுத்த ஒன்றிரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒன்றிரண்டு வாரங்களில் செயல்படுத்த வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்.
"மேலும் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு 28 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனும் நடைமுறையை குறைத்துக் கொள்ளல்லாம். ஏனெனில் பிரதமர் காலக்கெடுவைக் குறைத்து அறிவிப்பு வெளியிட முடியும்," என்று அம்னோ பொதுச்செயலர் டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm