
செய்திகள் மலேசியா
தடுப்பூசி மையமாக மாறும் புக்கிட் ஜாலில் அரங்கு; தினமும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: ரிசால் மரிக்கான்
கோலாலம்பூர்:
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கமானது திங்கட்கிழமை முதல் நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி மையமாக செயல்பட இருக்கிறது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிசால் மரிக்கான் நைனா மரிக்கான் Reezal Merican Naina Merican தெரிவித்துள்ளார்.
அங்கு நாள்தோறும் பத்தாயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தமது முகநூல் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏற்பாட்டின் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்போர், குறிப்பாக 40 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதீன் யாசின் அண்மையில் அறிவித்த தேசிய மீட்புத் திட்டத்தின் அடிப்படையில், ஒட்டுமொத்த புக்கிட் ஜாலில் அரங்கமும் தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
"மேலும், தேசிய தடுப்பூசித் திட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு உதவக்கூடிய அனைத்துவித வசதிகளும் பரிசீலிக்கப்படும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் முன்பே அறிவித்ததற்கு ஏற்ப, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"தொடக்கத்தில் விளையாட்டு அமைச்சின் சார்பில், 60 தன்னார்வலர்கள் புக்கிட் ஜாலில் அரங்கில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.
"எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள உடனே பதிவு செய்ய வேண்டும்," என்று அமைச்சர் ரிசால் மரிக்கான் நைனா மரிக்கான் (Reezal Merican Naina Merican) கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm