நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்: துங்கு ரசாலி

கோலாலம்பூர்:

கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பை புறக்கணிக்குமாறு மாமன்னருக்கு பிரதமர் மொஹிதின் யாசின் ஆலோசனை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசிய நாடாளுமன்றம் கடைசியாக கூடியதில் இருந்து இன்றோடு ஆறு மாதக் காலம் முடிந்துவிட்டதாகவும் குவா மூசாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துங்கு ரசாலி சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதாக கருதப்படும் என்றார் அவர்.

மலேசிய நாடாளுமன்றம் கடைசியாக டிசம்பர் 17ஆம் தேதி கூடியது. அதன் பிறகு இன்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்ததாக துங்கு ரசாலி தெரிவித்தார்.

Article 55இன்படி, மாமன்னர் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு உத்தரவிட முடியும் என்றும், நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்கவோ அல்லது கலைக்கவோ அவருக்கு மட்டுமே முழுமையான அதிகாரம் உண்டு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset