
செய்திகள் மலேசியா
'பாக்லா' துன் அப்துல்லாஹ் பதாவி நலமாக உள்ளார்
கோலாலம்பூர்:
மலேசிய முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் பதாவி காலமாகி விட்டதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
'பாக்லா' என்று பாசமாகக் குறிப்பிடப்படும் முன்னாள் பிரதமர் படாவி நலமாக இருப்பதாகவும் அவரது அலுவலகம் உறுதிபடுத்தியது.
சமூக வலைத்தளத்தில் யாரோ ஒரு விஷமி முன்னாள் பிரதமர் காலமாகி விட்டதாக பதிவிட்ட தகவல் வேகமாகப் பரவியது. இதற்கு முன்பும் இதேபோன்ற தகவல்கள் வெளிவந்து முன்னாள் பிரதமரின் அலுவலகம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 81 வயதான துன் அப்துல்லாஹ் பதாவி இறந்ததாக செய்தி வெளியிட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு தகவலையும் பிறருடன் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மை என்ன, தகவல் தெரிவித்தது யார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதன் பிறகே பொதுமக்கள் தகவலைப் பகிரவேண்டும் என்றும் துன் அப்துல்லாஹ் பதாவியின் அலுவலகம் அறிக்கைவழி கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm