
செய்திகள் மலேசியா
கிளந்தானில் பாதிப்பு அதிகரிக்க கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம்: சுகாதாரத்துறை விளக்கம்
கோத்தாபாரு:
கிளந்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா Beta திரிபு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு தொற்றுத் திரள்களுடன் சம்பந்தப்பட்ட 23 மாதிரிகள் அண்மையில் பரிசோதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஜெய்னி ஹுசின் (Zaini Hussin) தெரிவித்துள்ளார்.
"தொற்று உறுதியான அனைத்து மாதிரிகளையும் மேலதிகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதில்லை. இம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட தொற்றுத் திரள்களுடன் தொடர்புடைய மாதிரிகள் மட்டுமே மேலதிகமாக பரிசோதிக்கப்படுகின்றன.
"இதன்வழி கிளந்தானில் அண்மையில் உறுதி செய்யப்பட்ட பெரும்பாலான தொற்றுச் சம்பவங்களுக்குக் கொரோனாவின் Beta திரிபு காரணமாக இருக்க வாய்ப்புண்டு. இந்தக் கிருமித்தொற்று திரிபு மிக வேகமாக பரவக்கூடியது.
"மேலும் அன்றாடம் பதிவாகும் சராசரி மரண எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கிளந்தானில் கடந்த ஆண்டு 7 பேர் மட்டுமே பலியான நிலையில் அந்த எண்ணிக்கை இப்போது 175 ஆக உள்ளது. Beta திரிபானது கிளந்தானில் சமூக அளவில் பரவியுள்ளது," என்றார் டாக்டர் Zaini Hussin.
நேற்று கிளந்தானில் 245 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,837 ஆக உள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர், அதாவது 1.2 மில்லியன் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது தினமும் 6 முதல் 8 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 14 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm