
செய்திகள் மலேசியா
தேசிய மீட்சித் திட்டம் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது : பக்காத்தான் ஹராப்பான் உச்ச மன்றம் விமர்சனம்
கோலாலம்பூர்:
பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் அறிவித்துள்ள தேசிய மீட்சித் திட்டத்தில் எந்தவொரு திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் உச்ச மன்றம் விமர்சித்துள்ளது.
முழுமையான வியூகங்களோ, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளோ இல்லாமல் வெறுமனே சில 'பகுதி'களை மட்டும் கொண்டுள்ள இந்த அறிவிப்பைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாக பக்காத்தான் ஹராப்பான் உச்ச மன்றம் தெரிவித்துள்ளது.
"பல இன்னல்களுக்கு மத்தியில் பொது மக்களும் நிறுவனங்களும் மீண்டு வருவதற்கு கடுமையாகப் போராடும் நிலையில், அவர்களுக்கு அரசாங்கம் போதுமான உதவிகளைச் செய்ய வேண்டும்.
"தோல்வி அடைந்த திட்டத்தையே அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள மீட்சித் திட்டத்துக்கான பகுதிகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.
"மேலும் இது அவசர கதியில் வெளியிடப்பட்ட அறிவிப்பாகும். இந்த அரசாங்கம் தனது பாதையை தவறவிட்டதுடன், பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டது. ஒழுங்கற்ற தலைமைத்துவம் நிலவும் நிலையில், மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முறையில் அரசாங்கம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது," என பக்காத்தான் உச்ச மன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அமனா கட்சித் தலைவர் முஹம்மத் சாபு, ஜசெக பொதுச்செயலர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm