நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இவ்வாரம் மேலும் 1,500 ஊடகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி: டத்தோ சைஃபுதீன் அப்துல்லாஹ்

கோலாலம்பூர்:

மூன்றாவது கட்டமாக மேலும் 1,500 ஊடகப் பணியாளர்களுக்கு இந்த வாரம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃபுதீன் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 9ஆம் தேதி அன்று 98 ஊடகவியலாளர்களுக்கும், ஜூன் 16ஆம் தேதி  771 ஊடகப் பிரதிநிதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கெனவே பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

"ஊடகப் பணியாளர்களுக்கு மிக விரைவாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபாவும், தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் கைரி ஜமாலுடினும் நன்கு உணர்ந்துள்ளனர்.

"எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் நிச்சயம் துரிதப்படுத்துவார்கள்," என்றார் அமைச்சர் சைஃபுதீன்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset