நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

500,000 தடுப்பூசிகள் வழங்கும் சீனா: நன்றி தெரிவித்த மலேசியா

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கு மிக விரைவில் சீனாவில் இருந்து நன்கொடையாக 500,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi -யிடம் இருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் தெரிவித்தார்.
இதற்காக சீன அரசுக்கும் அந்நாட்டுக் குடிமக்களுக்கும் மலேசிய அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹிஷாமுதீன் கூறியுள்ளார்.

"இந்த விலை மதிப்பில்லாத உதவிக்காக சீனாவை வெகுவாகப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். சரியான நேரத்தில் சீனா செய்துள்ள இந்த உதவியின் மூலம் மலேசியாவில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசித் திட்டம் மேலும் வலுப்பெறும்.

"இந்த முன்னெடுப்பின் மூலம் மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான நட்பானது மேலும் உறுதியடையும். இதன் பலனாக இரு தரப்புக்கும் நன்மை விளையும்," என ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset