
செய்திகள் மலேசியா
MCO 3.0 விதிமுறைகளை மீறும் உற்பத்தி, வணிகத் துறைகளை அரசு கடுமையாக கருதுகிறது: இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்:
தற்போதைய நடமாட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையில் (MCO 3.0), உற்பத்தி மற்றும் வணிகத் துறைகள் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் முயற்சியில், அரசாங்கம் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என்றார் மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்,
ஜூன் 1 முதல் ஜூன் 14 வரை, 404 தொழிற்சாலைகள் MCO 3.0 விதிமுறைகளுக்கு இணங்க ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 90 தொழிற்சாலைகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவலில்லை. எனவே அவற்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சும் இந்த ஆண்டு மே 13 முதல் 597,252 ஆய்வுகளை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர் அவற்றில் 414 தொழிலகங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.
"ஜூன் 15 அன்று, 1,428 தினசரி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் 22 வணிக வளாகங்களில் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சில வளாகங்கள் MCO 3.0 SOP களை பின்பற்றத் தவறிவிட்டன," என்றும் அவர் கூறினார்.
"தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (எம்.கே.என்) ஜூன் 6 முதல் பல்வேறு அமைச்சகங்களிலிருந்து அமலாக்க நடவடிக்கை தேவைப்படுவதாக 266 புகார்கள் வந்துள்ளன" என்று இஸ்மாயில் சப்ரி மேலும் கூறினார்.
"அவற்றில், 50 புகார்கள் அவசியமற்றவை என்றும் SOP களைப் பின்பற்றாததற்காக 45 புகார்கள் தனியாக பெற்றதாகவும் கூறிய அமைச்சர், வேலைவாய்ப்பு வளாகங்களில் ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு மீறல்கள் சம்பந்தப்பட்டவையும் அடங்கும். MCO 3.0 விதிமுறைகளை மீறும் உற்பத்தி, வணிகத் துறைகளை அரசு கடுமையாக கருதுகிறது " என்றார்.
புகார் கொடுக்க விரும்புவோர் மலேசிய அரசு அழைப்பு மையத்தை (MyGCC) 03-80008000, 80008000@mygcc.gov.my அல்லது aduan.pematuhan.mkn.gov.my என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm