நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயன்ற விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுக: மாமன்னர்

புத்ராஜெயா:

நாடாளுமன்றக் கூட்டத்தை இயன்ற விரைவில் கூட்டுமாறு மாமன்னர் தெரிவித்துள்ளார்.
இன்று மலாயா ஆட்சியளர்களுக்கான கலந்துரையாடலுக்குப் பிறகு மன்னர் இவ்வாறு அறிவுறுத்தி இருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள மாமன்னர், இயன்ற விரைவில் மந்தை எதிர்ப்பு சக்தி என்ற நிலையை மலேசியா எட்டிப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்துவத்தை எளிமைப்படுத்துவதில் நடப்பு அரசாங்கம் திட்டவட்டமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் மாமன்னர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தார் மாமன்னர். அதையடுத்து இன்று மலாயா ஆட்சியாளர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக விரைவில் மேலதிகத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset