செய்திகள் மலேசியா
மஇகா மூத்த தலைவர் டான்ஸ்ரீ நிஜார் காலமானார்
கோலாலம்பூர்:
மஇகா மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ நிஜார் காலமானார். அவருக்கு வயது 85.
பேராக் மாநிலத்தில் உள்ள பெங்காகலான் ஹுலு பகுதியில் பிறந்தவர் நிஜார்.
கடந்த 1980ஆம் ஆண்டு மஇகாவின் பொருளாதார மற்றும் கல்வி பணியகங்களுக்கு தலைவராக அன்றைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவால் நியமிக்கப்பட்டார் நிஜார்.
பின்னர், அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராகவும் கடந்த 1989 முதல் 1991 வரை நிஜார் பணியில் இருந்தார்.
மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர், நாடாளுமன்றச் செயலாளர் என மஇகாவிலும், அரசாங்கத்திலும் பல பொறுப்புகள் வகித்த டான்ஸ்ரீ கர்னாயில் சிங் நிஜார் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. 'மாட்டுவண்டிப் பையன்' என்ற தலைப்பில் ('The Bullock Cart boy') தமது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்திருந்தார் டான்ஸ்ரீ நிஜார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
