
செய்திகள் மலேசியா
ஆறுதல் தகவல்: டெங்கி பாதிப்பு, மரணச் சம்பவங்கள் வெகுவாக குறைந்தன
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் டெங்கி காய்ச்சல் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கி நோயாளிகள் எண்ணிக்கையிலும் இறப்பு விகிதத்திலும் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 12,188 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 45,584 பேருக்குடெங்கி பாதிப்பு ஏற்பட்டு 84, மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
டெங்கியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் 75 விழுக்காடும், உயிரிழப்போர் விகிதம் 91 விழுக்காடு அளவிலும் குறைந்துள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சர் ஆதம்பாபா இன்று ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
'ஆசியான் டெங்கி தின'த்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா கிருமித் தொற்றுடன் நாடு போராடிக் கொண்டிருந்தாலும், மலேசியாவில் சுகாதார கட்டமைப்புக்கு நீண்ட காலமாக பெரும் சுமையாக உள்ள டெங்கிக்கு எதிரான போராட்டம் தொடரவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011 முதல் ஆண்டுதோறும் ஜூன் 16ஆமத் தேதி டெங்கி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
"பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் பகுதிகளைக் கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும். தினம்தோறும் இதற்காக 10 நிமிடங்களேனும் ஒதுக்கவேண்டும்.
"MCO காலகட்டத்தில் வீட்டிலேயே அதிக நேரம் இருப்பதுடன் தாங்கள் குடியிருக்கும் வளாகம் டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று டாக்டர் ஆதம் பாபா அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm