
செய்திகள் மலேசியா
MCO 3.0: நாள்தோறும் ஒரு பில்லியன் இழப்பு ஏற்படுகிறது: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
முழு முடக்கநிலை காரணமாக அரசாங்கத்துக்கு தினந்தோறும் ஒரு பில்லியன் இழப்பு ஏற்படுவதாக பிரதமர் மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
முழு முடக்கநிலையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்துவது என்ற முடிவை தம்மால் அவ்வளவு எளிதில் எடுக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"ஒவ்வொரு மலேசியரின் சுகாதாரம், நலன், வாழ்வாதாரங்களை மனதிற்கொண்டு யோசிக்கும் போது இந்த கொரோனா நெருக்கடியில் இருந்து நாடு இயன்ற விரைவில் மீண்டு வர வேண்டியது அவசியமாகிறது.
"Pemerkasa Plus எனும் பொருளாதார ஊக்க மற்றும் உதவித்தொகுப்பை அறிவித்துள்ளேன். 40 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அரசாங்கத்தின் இந்த உதவி பாதிக்கப்பட்டுள்ள தனி நபருக்கும் தொழில்களுக்கும் சுமைகளைக் குறைக்க கைகொடுக்கும் என நம்புகிறேன்," என்று தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்து உரையாற்றிய போது பிரதமர் மொஹிதின் யாசின் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது அரசாங்கத்துக்கு நாள்தோறும் 2.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் (Tengku Zafrul Abdul Aziz) தெரிவித்திருந்தார்.
எனினும், இரண்டாவது MCO காலகட்டத்தில் அன்றாடம் 300 மில்லியன் ரிங்கிட்டாக அந்த இழப்பு குறைந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில், மூன்றாவது MCO அமலில் இருப்பதால் ஏற்படும் இழப்பு குறித்து பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm