
செய்திகள் மலேசியா
பொறுமை தேவை: பயணங்கள், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக பிரதமர் அறிவுறுத்து
புத்ராஜெயா:
பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்கள் பொறுமை காக்க வேண்டும் என பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் பகுதியை எட்டிப்பிடிக்கும் போது அனைவரும் பயணங்களை மேற்கொள்ள இயலும் என்று அவர் இன்று தெரிவித்தார்.
"மீட்புத் திட்டத்தின் கீழ் நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும் பட்சத்தில், நவம்பர் மாதம் பயணங்கள் சாத்தியமாகும். அப்போது அனைவரும் நமது அன்புக்குரியவர்களுடன் இணைய முடியும்.
"மீட்புத் திட்டத்தின் நான்காம் பகுதியில் விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். எனினும் அச் சமயம் அன்றாடத் தொற்று எண்ணிக்கை 500க்கும்கீழ் பதிவாக வேண்டும் என்பதும், நாட்டின் மக்கள் தொகையில் 60விழுக்காட்டினர் தடுப்பூசிகளை இரு தவணைகளும் போட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
"அப்போது உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கு அனுமதி உண்டு. மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் குடும்பத்தாருடன் இணையலாம்.
"காற்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்களுடன் நடத்தவும், சமூக விழாக்களுக்கு அனுமதி அளிக்கவும் கோரி நிறைய விண்ணப்பங்கள் என்னிடம் வருகின்றன.
"கிராமத்தில் உள்ள பெற்றோர், உறவினர்கள், பாசத்துக்குரிய குடும்பத்தாரைப் பார்க்கச் செல்ல அனுமதிக்கக் கோரிதான் நிறைய விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன.
"நாம் பொறுமையோடு இருக்க வேண்டும். தற்போது இவற்றையெல்லாம் நாம் செய்ய முடியாது. கொரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும்," என்று பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm