
செய்திகள் மலேசியா
MyFutureJobs வழி பேராக், கோலாலம்பூரில் வேலைவாய்ப்பு இணையவழி நேர்முகத் தேர்வு
கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சின் பெர்கேசோவழி வேலை தேடுபவர்களுக்கு மற்றுமொரு இயங்கலை வழியிலான நேர்முகத் தேர்வு. குறிப்பாக பேராக், கோலாலம்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு. MyFutureJobs ஏற்பாடு செய்திருக்கும் இந்த நேர்முகத் தேர்வில், 19/06/2021, சனிக்கிழமை அன்று முன்பதிவு செய்தவர்கள் CISCO WEBEX வழி கலந்து கொள்ளலாம்.
இன்று தொடங்கி வேலை தேடிபவர்களுக்கு உதவியாக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உங்களைப்பற்றிய குறிப்பு தெளிவாக, விவரமாக எழுதும் பயிற்சி கைதேர்ந்த பயிற்சியாளரால் அளிக்கப்படுகிறது.
16/06/2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை, CISCO WEBEX தளத்தின் வழி, சந்திப்பு எண் : 184 820 4631 மற்றும் கடவுச்சொல் 2JAcj6p36Rj கொண்டு இந்த பயிற்சியில் இணையலாம். நீங்கள் நாட்டின் எந்த மூலையிலிருந்தும், இலவசமாக இந்த பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்ததாக பெர்கேசோ அதிகாரிகள் மற்றும் அனுபவசாலிகள் பங்கு கொள்ளும் இலக்கவியல் (டிஜிட்டல்) திறன்பாடு குறித்த தகவல்கள், அனுபவக் குறிப்புகள் வழங்கப்படும். 18/06/2021, வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12.30 மணி வரை இந்த இணையவழி இலக்கவியல் குறித்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம்.
பொறியியல், அலுவலக பணியாளர், மேலாளர், நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. பேராக் மாநிலத்தில் வசிப்பவர்கள் உடனடியாக பதிந்து கொண்டு, நேர்முகத் தேர்விற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். Carsem, MSSB Engineering, Dindings, Boustead Plantation, Imperia Asia போன்ற நிறுவனங்கள் பங்குகொள்கின்றன. பேராக்வில் நடைபெறும் இணையவழி நேர்முகத் தேர்வு குறித்த மேல் விவரங்களுக்கு பிரியா 0192791780, கமல் 0192562183 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோலாலம்பூரில் 99 SPEEDMART- இல் கிளை நிர்வாகி, துணை நிர்வாகி, கேஷியர் போன்ற பல்வேறு வேலை வாய்ப்புகள், படிவம் 5 முடித்தவர்கள், டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்காகக் காத்திருக்கின்றன. இது குறித்த மேல் விவரங்களுக்கு 0192874768, Syafiqa என்பவரைத் தொடர்பு கொள்ளவும்.
மனிதவள அமைச்சின், பெர்கேசோ வழிநடத்தும் MyFutureJobs வேலை தேடுவதற்கான தளத்தின் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் இயங்கலையில் CISCO WEBEX வழி பங்கு கொள்ள வேண்டும். 580 வேலை வாய்ப்புகள் பேராக், கோலாலம்பூரில் வசிப்பவர்களுக்காகக் காத்திருக்கின்றன. மேல்விவரங்களுக்கு 1 300 22 8000 அல்லது www.perkeso.gov.my எனும் அகப்பக்கத்தைப் பார்க்கவும்.
உடல்பேறு குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்பையும் 99 Speedmart ஏற்படுத்தியுள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவற வேண்டாம்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm