
செய்திகள் மலேசியா
வருமான வரி பாக்கி: நஜீப் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
கோலாலம்பூர்:
தாம் செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கி தொடர்பாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி முன்னாள் பிரதமர் நஜீப் தொடுத்த வழக்கு அவருக்கு சாதகமாக அமையவில்லை.
எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழும் பட்சத்தில், அதற்குரிய சரியான காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்று நஜீப்பின் மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.
தாம் செலுத்த வேண்டிய தொகை தொடர்பாக வருமான வரித்துறையின் சிறப்பு மேல் முறையீட்டு ஆணையத்தை நஜீப் அணுகலாம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கையின் மூலம் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்றார்.
ஏனெனில், நஜீப் செலுத்தும் தொகையைத் திருப்பி அளிப்பதற்குரிய நிதி ஆதாரங்களும் வலுவும் வருமான வரி இலாகாவிடம் உள்ளது என்றார் நீதிபதி.
முன்னாள் பிரதமரான நஜீப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டால் மேலும் பலர் இதேபோன்ற தீர்ப்பை வழங்கக் கோரி நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்புள்ளது என்றும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக நஜீப் எதிர்கொண்டுள்ள வங்கி திவால் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது.
இதேவேளையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் பிரதமர் நஜீப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm