நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

$1பில்லியன் மதிப்பிலான அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியது பாகிஸ்தான் 

கராச்சி:

பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறது.

இஸ்லாமாபாத்தில் மத்திய வங்கியின் பேச்சாளர் அந்தத் தகவலை வெளியிட்டார்.

பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடனைக் கட்டுமா என்ற சந்தேகத்துக்கு நடுவே அந்தச் செய்தியை அவர் சொன்னார்.

பாகிஸ்தானியப் பொருளியல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

நெடுங்காலம் இல்லாத அளவுக்குப் பணவீக்கமும் விலைவாசியும் உயர்வும் அதை வாட்டுகிறது.

அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.

அண்மையில் 1,700 உயிர்களைப் பறித்த வெள்ளம் ஏற்படுத்திய சேதமும் பொருளியலை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset