நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரிய ரயில்வே ஊழியர்கள்  வேலை நிறுத்தம் 

சியோல்:

தலைநகர் சியோலில் இயங்கும் சியோல் மெட்ரோ (Seoul Metro) ரயில் நிலையத்தின் தொழிற்சங்க ஊழியர்கள் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனின்றி முடிந்ததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த மெட்ரோ நிறுவனத்தின் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். 

அதனால் அந்த நிறுவனம் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களையும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களையும் உடனடியாக வேலைக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Korail union raided over rail strike

சியோல் மெட்ரோ நிறுவனம் 2026ஆம் ஆண்டில்  1,500க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்று  கூறியதை அடுத்து தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன.

நிறுவனத்தின் பாதுகாப்புக் கருதி ஊழியரணியில் அதிகமான ஊழியர்கள் வேலையில் இருக்கவேண்டும் என அவை கூறுகின்றன. 

தென்கொரிய அரசாங்கம் ஊழியர்களை உடனடியாக  வேலைக்குத் திரும்பி வருமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உத்தரவை மீறுவோருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை அல்லது 22,000 டாலருக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset