செய்திகள் உலகம்
சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்
பீஜிங்:
சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின் காலமானார்.
1989-ம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார்.
அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். 96 வயதான ஜியாங் ஜெமின் நேற்று காலமானதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அரசு நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.
ஜியாங் ஜெமின், 1989-ல் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தபோதுசீனா பொருளாதார நவீன மயமாக்கலின் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. 2003-ல் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில், சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருந்ததும், அந்த நாடு வல்லரசு அந்தஸ்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
