
செய்திகள் மலேசியா
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், அதிக நேரம் அவை இயங்கவும் அனுமதி கோருகிறது பிரிமாஸ்
கோலாலம்பூர்:
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், அதிக நேரம் அவை இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என மலேசிய இந்திய உணவகங்கள் சங்கம் (Primas) கேட்டுக் கொண்டுள்ளது.
உணவகத் துறை கொரோனா நெருக்கடி காலத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.
காலை 6 முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது இச் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது. தற்போது காலை 8 முதல் இரவு 8 மணி வரை உணவகங்களைத் திறந்து வைத்திருக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
உணவகத் துறை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் வங்கிக் கடன்கள் மீது கடன் தவணைச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று பிரிமாஸ் தலைவர் சுரேஷ் வலியுறுத்தி உள்ளார்.
முழு முடக்கநிலை அதிக காலம் நீடித்தால் 50 விழுக்காடு உணவகங்கள் மூடப்படும் ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தில் 25 விழுக்காடு தள்ளுபடி அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயிரம் உணவக உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது கைவசம் உள்ள சேமிப்பு மற்றும் இதர ஆதாரங்களின் துணையோடு 2 மாதங்களுக்கு மட்டுமே எங்களால் இயங்கமுடியும் என 80 விழுக்காட்டினர் தெரிவித்திருப்பதை பிரிமாஸ் தலைவர் சுரேஷ் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm