
செய்திகள் மலேசியா
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 97% படுக்கைகள் நிரம்பிவிட்டன: ஆதம் பாபா
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 97 விழுக்காடு படுக்கைகள் நிரம்பிவிட்டதாக சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
சுவாச உதவி தேவைப்படும் 4 மற்றும் 5ஆம் வகை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இத்தகைய வகையைச் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,751ஆக பதிவாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது அந்த எண்ணிக்கை 30,287ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
கொரோனா 4ஆம் வகை நோயாளி என்றால் அவருக்கு சுவாச உதவி தேவைப்படும் என்றும் 5ஆம் வகை என்றால் கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள், செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) தேவைப்படுபவர் என்றும் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
தற்போது இவ்வகை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதம் பாபா, கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் கிளினிக் அல்லது மருத்துவ மையங்களில் காரணமின்றி கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து அரசிடம் புகார் அளிக்கலாம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm