நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார்.

மும்பை:

தேசிய விருது பெற்ற பழம்பெரும் மராத்தி நடிகர் விக்ரம் கோகலே காலமானார். அவருக்கு வயது 77.

மராத்தி, இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் விக்ரம் கோகலே. 1971-ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பர்வானா’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் விக்ரம் கோகலே. 

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘அனுமடி’ (Anumati) மராத்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அதுமட்டுமல்லாமல், ‘ஆகாத்’ என்ற படம் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்தவர், அண்மையில் இந்தியில் வெளியான ‘நிகம்மா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், 77 வயதான விக்ரம் கோகலே புனேவில் உள்ள மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாக உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். 

இது தொடர்பாக அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset