நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து குரோசியாவை வீழ்த்தியது: யூரோ கோப்பை

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- குரோசியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை பதிவு செய்தது. ரஹீம் ஸ்டெர்லிங் அந்த கோலை பதிவு செய்தார். அவர் கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் 19 கோல்கள் அடிப்பதில் பங்கு வகித்துள்ளார். 13 கோல்கள் அடித்ததுடன், 6 கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்துள்ளார்.

அதன்பின் குரோசியாவால் பதில் கோல் அடிக்க முடியாததால் இங்கிலாந்து 1-0 என வெற்றி பெற்றது. 

யூரோ கோப்பை வரலாற்றில் இதற்கு முன் இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றதே கிடையாது. தற்போது அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆஸ்திரியா - வடமெசிடோனியா ஆட்டம்

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டம் சுவாரஸ்யமாக  அமைந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரியாவும் வடமெசிடோனியாவும் மோதின. 

Euro 2020 news – Austria super-subs Michael Gregoritsch and Marko  Arnautovic seal win over North Macedonia - Eurosport

ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததோடு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் முழுவதும் ஆஸ்திரியா ஆட்டக்காரர்கள் வசமே இருந்தது.

ஆஸ்திரியா 3 கோல்கள் புகுத்தியது. வடமெசிடோனியாவால் ஒரே ஒரு கோலை மட்டுமே திருப்ப முடிந்தது. 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset