நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பருவநிலை மாற்ற பேரழிவுகளுக்கு நிதி உருவாக்க உடன்பாடு

ஷர்ம் அல்-ஷேக்: 

பருவநிலை மாற்ற பேரழிவுகளால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பருவநிலை நிதியை உருவாக்குவதற்கு எகிப்து மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. பருவநிலை மாற்ற தீர்மானத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27ஆவது மாநாடு எகிப்தின் ஷார்ம் அல்ஷேக் நகரில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முக்கியமாக, பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதாகக் கூறியிருந்த ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்டுவது தொடர்பாக ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், ஏழை நாடுகளுக்கு விரைந்து இழப்பீடு கிடைக்க வழி செய்யும் வகையில் பருவநிலை நிதியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் எகிப்து சார்பில் சனிக்கிழமை பிற்பகலில் வரைவு முன்மொழியப்பட்டது.

இழப்பு மற்றும் சேதங்கள் என்ற பெயரில் முன்மொழியப்பட்ட இரண்டாவது வரைவுத் தீர்மானத்தில், "பருவநிலை நிதிக்கு வளர்ந்த நாடுகள் பெருமளவு பங்களிப்பு செய்யவேண்டும், தனியார் மற்றும் பொதுத் துறை சார்ந்த பிற சர்வதேச நிதி நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset