
செய்திகள் மலேசியா
அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை: டாக்டர் நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் ஏறுமுகமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரு வாரங்களுக்குள் அன்றாட தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"இப்போதும்கூட சிலர் பயணங்களை மேற்கொள்கிறார்கள். மேலும் சிலர் ஒன்று கூடி சிலவற்றைக் கொண்டாடுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. இது பொறுப்பற்ற செயல்.
"கிருமித்தொற்று சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்," என்று தமது பதிவில் நூர் ஹிஷாம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நாட்டில் 6,849 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 5,793 ஆக குறைந்தது. இந்நிலையில் நூர் ஹிஷாம் அனைவரது ஒத்துழைப்பையும் கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm