
செய்திகள் மலேசியா
நெகிரியில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?: சுகாதாரக் குழுத் தலைவர் விளக்கம்
நெகிரி செம்பிலான்:
பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே அன்றாடத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என நெகிரி மாநில சுகாதாரக் குழுவின் தலைவர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலை ஊழியர்கள், தொற்று பாதித்தவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள், தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவோர் என பலதரப்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிரியில் ஜூன் 12ஆம் தேதி 618 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இதன்மூலம் அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் அது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஜூன் 11ஆம் தேதி 685, ஜூன் 10ஆம் தேதி 507, ஜூன் 9ஆம் தேதி 507, ஜூன் 8ஆம் தேதி 505 என மாநிலத்தில் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இதுவரை பதிவாகி உள்ள ஒட்டுமொத்த தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 33,451 ஆக அதிகரித்துள்ளது. இந் நிலையில் அங்கு தொற்றைக் கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நான்கு அரசு மருத்துவமனைகள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் மாநிலத்தில் 5 தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ளன என்றும் வீரப்பன் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm