
செய்திகள் மலேசியா
மேலும் 63 பேர் பலி: 15 புதிய தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டன
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 63 பர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 917 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 452 பேருக்கு சுவாச உதவி (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது 73,324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய சில தினங்களாகவே மலேசியாவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட அனைத்துப் படுக்கைகளுமே நிரம்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் இன்று புதிதாக மேலும் 15 தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 11 திரள்கள் பணியிடங்களில் உருவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக அளவில் 3 திரள்களும், கல்வி நடவடிக்கை சார்ந்த ஒரு தொற்றுத் திரளும் கண்டறியப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm