செய்திகள் மலேசியா
தேர்தல் நாளை முன்னிட்டு அனைத்து நகரப் பொதுப் போக்குவரத்து சேவைகளும் இலவசம்
கோலாலம்பூர்:
15வது பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை நாள் முழுவதும் RapidKL, Rapid Penang, Rapid Kuantan ஆகியவற்றின் கீழ் இயங்கும் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் பயணிகள் இலவசப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று Prasarana Malaysia Bhd அறிவித்துள்ளது.
இதில் Rapid பேருந்துகள், மோனோரயில், MRT, BRT, LRT சேவைகளும் அடங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
“இது மலேசியர்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதை எளிதாக்கும்” என நம்புவதாக Prasarana இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
My50 பாஸ் வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் சேவைகளைப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில்Touch ‘n Go அட்டைப் பயனர்கள் தங்கள் அட்டைகளில் இருந்து கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய முடியும்.
மோனோரயில், MRT, BRT மற்றும் LRT வழித்தடங்களில் டோக்கன்களைப் பயன்படுத்த விரும்பும் பிற பயணிகள், சிறப்பு ஒருவழி டோக்கனைப் பெற, எந்த நிலையத்திலும் வாடிக்கையாளர் சேவை அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 10:30 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் நாளை மலேசியாவுக்கு வருகை
January 5, 2025, 8:18 pm
தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm