நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளப்பெருக்கால் மூவாயிரம் பேர் பாதிப்பு: 31 நிவாரண மையங்களில் தங்க வைப்பு

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாக அதிகரித்துள்ளது.

ஆறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது இன்று காலை 10 மணி நிலவரமாகும்.

ஜொகூர், கிளந்தான், சிலாங்கூர், மலாக்கா, பினாங்கு, பேராக் மாநிலங்களில் 2,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக நல்வாழ்வுத்துறை இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

No respite for flood-stricken Kelantan as evacuees top 10,000 | The Star

கிளந்தானில் மிக  அதிகமாக 677 குடும்பங்களை சேர்ந்த 2038 பேர் 8  நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.

ஜொகூரில் 73 குடும்பங்களை சேர்ந்த 319 பேர் தங்கி உள்ளனர்.

தற்போது 914 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 31 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேராக்கில் (289), சிலாங்கூரில் (182), பினாங்கில் (139) and மலாக்காவில் (42) பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரவாக்கில் உள்ள இரு ஆறுகள் தவிர, ஜோகூரில் உள்ள சுங்கை ஸ்கூடாய், கிளந்தானில் உள்ள சுங்கை ரண்டாவ் பாஞ்சாங் ஆகிய இடங்களில் நீர் மட்டம் அபாய அளவில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset